ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்புகள் என்னென்ன…? பிரதமர் மோடி ஒவ்வொ…

[ad_1]
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்புகள் என்னென்ன…?

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு அவர் கோவா எல்லையில் உள்ள கர்நாடகம் மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் வைத்து கடற்படையினருடன் சேர்ந்து தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினார்.

இந்த போர்க்கப்பலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:-

* முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த். 2022-ம் ஆண்டு இயக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த், சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைத்தது.

* கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இது, இந்தியாவின் வளர்ந்து வரும் கடற்படை மற்றும் தொழில்துறை வலிமையை பிரதிபலிக்கிறது.

* ‘விக்ராந்த்’ என்ற பெயருக்கு ‘தைரியமான’ அல்லது ‘வெற்றியாளர்’ என்று பொருள்.

* 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. தோராயமாக இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவு மற்றும் 18 தளங்கள் உயரம் கொண்டது.

* இது கிட்டத்தட்ட 1,600 பேர் கொண்ட குழுவினரையும், 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும், 2,400 பெட்டிகளையும் கொண்டுள்ளது, மேலும் 250 டேங்கர் எரிபொருள் கொண்டு செல்கிறது.

* இந்த விமானம் தாங்கிக் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்கள் உட்பட 30 விமானங்கள் வரை தாங்கும் சக்தி கொண்டது.

* பல வருட சோதனைகள் மற்றும் அனுமதிகளுக்குப் பிறகு, ஐ.என்.எஸ். விக்ராந்த் கடந்த ஆண்டு முழு செயல்பாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இப்போது மேற்கு கடற்படை கட்டளையின் கீழ், இது இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் சிக்கலான கடற்படைப் பணிகளைக் கையாளத் தயாராக உள்ள ஒரு முழுமையான திறன் கொண்ட போர்க்கப்பலாக திகழ்ந்து வருகிறது.

[ad_2] Advertisement
Aarvam IAS Academy-No 1 Institute for TNPSC,TNUSRB and UPSC Coaching Classes in Chennai- Call : 74488 14441 for Free Demo Class.



We will be happy to hear your thoughts

Leave a reply

ArasuVelai
Logo
Shopping cart